Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்

fan
Last Updated: சனி, 13 ஜனவரி 2018 (16:08 IST)
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்த ரசிகருக்கு ரூ. 23 லட்சம் ஜாக்பாட் அடித்துள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து -  பாகிஸ்தானிடையே நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டியில் முதல் இரண்டு போட்டியில் நியூசிலாந்து வென்றது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி டுனேடனில் நடந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் அடித்த சிக்சரை மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த டோகர்த்தி என்ற ரசிகர் ஒத்தகையால் பிடித்தார். இத்தொடருக்கு முன்னதாக  மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் தனியார் நிறுவனம் சார்பில் கொடுக்கும் டீ சர்ட்டை அணிந்து ஒத்த கையால் கேட்ச் பிடித்தால் பரிசுத்தொகையாக ரூ. 23 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது. இதை இன்று நியூசிலாந்தை சேர்ந்த டோகர்த்தி என்ற ரசிகர் பிடித்து பரிசுத்தொகை பெற்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட டோகர்த்தியை அவரது நண்பர்கள் கேலி செய்ததாக தெரிவித்த அவர், தற்போது அவரது நண்பர்களிடம் இந்த நிகழ்வை பெருமையாக கூறிக் கொள்ள முடியும் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :