வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 6 செப்டம்பர் 2014 (10:55 IST)

41 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் (டி20) போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.

பின், முதல் நாள் போட்டி மழையால் ரத்தானது. மேலும் இவ்விரு அணிகளுக்கான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின் 4 ஆவது ஒரு நாள் போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றிப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியது.

இந்நிலையில் 5 ஆவது ஒரு நாள் போட்டி 5 செப்டம்பர், 2014 (நேற்று) நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சைத் தேர்வுச் செய்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தனது இன்னிங்சைத் தொடங்கினர்.

தொடக்கத்தில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. பின்னர், ரன் வேட்டையில் குதித்தனர். குறிப்பாக, ஜோரூட் சதம் அடித்து இங்கிலாந்து ரசிகர்களின் முகத்தில் புன்னகையைப் பரிசாக வழங்கினார். இறுதியில், இங்கிலாந்து அணி 294 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியினர் ஜடேஜாவின் 87 ரன்களைத் தவிரப் பெரிதாகச் சொல்லும்படியான பங்களிப்பு ஒன்றுமில்லை. இறுதியில் இந்திய அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சதம் கண்ட ஜோரூட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தொடர் நாயகன் விருதை ரெய்னாப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.