வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 5 செப்டம்பர் 2014 (10:06 IST)

5 ஆவது ஒரு நாள் போட்டி: தொடரை முழுமையாக வெல்லுமா இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான 5 ஆவது ஒரு நாள் போட்டி லீட்சில், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடக்கவுள்ளது.
 
இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் (டி20) போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.
 
பின் நடக்க இருந்த முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இவ்விரு அணிகளுக்கான 2 ஆவது ஒரு நாள் போட்டி 27 ஆகஸ்ட், 2014 அன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
 
இதைத் தொடர்ந்து 30 ஆகஸ்ட், 2014 அன்று நாட்டிங்காம் நகரில் நடந்த 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின் 4 ஆவது ஒரு நாள் போட்டியிலும்  9 விக்கெட் வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றிப் பெற்று புதிய மைல்கல்லை எட்டியது.
 
இதனால் இந்திய கேப்டன் சாதனைப் பட்டியலிலும், இங்கிலாந்து கேப்டன் வேதனைப் பட்டியலிலும் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இவ்விருஅணிகளுக்கான 5 ஆவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கவுள்ளது.
 
இந்திய அணி கடந்த போட்டிகளில் காட்டிய அதே உத்வேகத்தை இன்றும் தொடருமானால், இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி. பேட்டிங்கில் தோனி, ரெய்னா, ரஹானே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் ஷகீர் தவான் எழுச்சிப் பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. பந்து வீச்சாளர்களில் ஜடேஜா,அஸ்வின் ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தை இன்றும் எதிர்ப்பார்க்கலாம்.
 
அதேசமயம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியை பெற அயராது பாடுபடும். இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிக மோசமான நிலையில் உள்ளதால் தொடரை முழுமையாக வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.