செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2014 (09:10 IST)

4 ஆவது ஒரு நாள் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் பலப்பரிட்சை

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
 
இந்தியா வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி, மற்றும் 3 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்குபெறவுள்ளது. 
 
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான  முதல் ஒரு போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 124 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின் டெல்லியில் நடந்த 2 ஆவது போட்டியில் இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
மேலும், விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த 3 ஆவது ஒரு நாள் போட்டி புயலால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியா– வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 4 ஆவது ஒருநாள் போட்டி  தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
 
இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் கடந்த போட்டியில் செயல்பட்டது போல் இன்றும் சிறப்பாக விளையாடினால் வெற்றி நிச்சயம். கோலி மீண்டும் தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். ரெய்னா, தோனி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
 
வெஸ்ட்இண்டீஸ் அணியிலும் தலைசிறந்த வீரர்கள் இருப்பதால் இன்று நடைபெறும் ஆட்டம் பெறும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும்.