'மேற்கிந்திய தீவுகள் அணி' ஆறுதல் வெற்றிக்கு கூட வழி இல்லை

'மேற்கிந்திய தீவுகள் அணி' ஆறுதல் வெற்றிக்கு கூட வழி இல்லை


Dinesh| Last Updated: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (13:32 IST)
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைபற்றிய இந்திய அணி, ஆறுதல் போட்டியான 4 வது டெஸ்ட் போட்டியில், விளையாடி வருகிறது.

 


இப்போட்டி நேற்று முன்தினம் குயின்பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி,  பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டமும், பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது நாளான நேற்றும், தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 4வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்படுவதாக கூறியுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :