Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

3-வது ஒருநாள் போட்டி: நியூஸீலாந்து 224 ரன்கள்

Webdunia| Last Modified சனி, 4 டிசம்பர் 2010 (13:15 IST)
வதோதராவில் நடைபெறும் இந்திய, நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.

106/7 என்ற நிலையிலிருந்து பிராங்க்ளின், நேதன் மெக்கல்லம் இணைந்து சிறப்பாக விளையாடி 94 ரன்களைச் சேர்த்தனர்.

மெக்கல்லம் 53 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து 48-வது ஓவரில் அஷ்வினிடம் ஆட்டமிழந்தார்.

துவக்கத்தில் பிரண்டன் மெக்கல்லம் ஜாகீர்கான் பந்தில் ஆட்டமிழக்க, அதன் பிறகு சரிவு தொடங்கியது.
கப்தில், வில்லியம்ஸன், டெய்லர், ஸ்டைரிஸ், வெட்டோரி, ஹாப்கின்ஸ் என்று அனைவரும் பெவிலியன் நோக்கி நடையைக் கட்ட நியூஸீலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து ஒரு நேரத்தில் 125ரன்கள் வருமா என்ற நிலையில் இருந்தது.

ஆனால் கவுதம் கம்பீர் பிடியை நழுவ விட்டார். இதற்குக் காரணம் தொடர்ந்து ரவீந்தர் ஜடேஜாவிடம் பந்தைக் கொடுத்து வீசச் செய்தார். அது எதிர்மறையாகப் போய்விட்டது. அவர் 7 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்தார் விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றவில்லை.
ஜாகீர் கான், நெஹ்ரா ஆகியோர் தலா 8 ஓவர்களே வீசினர். அவர்களை 10 ஓவர்கள் வீசச்செய்திருந்தால் ஆட்டம் முன் கூட்டியே முடிந்து போக வாய்ப்பிருந்திருக்கும்.

ஜடேஜா 4 ஓவர்களுக்குப் பிறகு வீசியிருக்கக் கூடாது. யுவ்ராஜ் சிங் ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவில்லை.

முனாப் படேல் மீண்டும் சிறப்பாக வீசி 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ஜாகீர் கானும் அபாரமாக வீசி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஷ்வின், யூசுப் பத்தான் ஆகியோரும் நன்றாக வீசி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பவர் பிளேயின் போது ஜடேஜாவுக்கு பவுலிங் கொடுத்து கம்பீர் நியூஸீலாந்தின் மீதான பிடியை நழுவவிட்டார்.

ஆனால் ஜேம்ஸ் பிராங்கிளின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 108 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :