3 பந்துகளில் 4 விக்கெட் - உலகக் கோப்பை அதிசயம் [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (15:09 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 3 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைக்கப்பட்டது.
 
2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் நெதர்லாந்து அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது.
 
ஆனால் அடுத்த 3 பந்துகளில் மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் இழந்தது. 50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது.
 
அதன் வீடியோ காட்சி கீழே:
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :