வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 8 அக்டோபர் 2014 (14:19 IST)

நடைபெறுமா இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒரு நாள் போட்டி?

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி கொச்சியில் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி, மற்றும் 3 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்குபெறவுள்ளது.

இந்நிலையில், சம்பள குறைப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்  முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட மருப்பதாக தெரிகிறது. எனினும் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
இருப்பினும் இப்போட்டியில் பங்குபெறும் தோனி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. தொடக்கவீரர்களாக ரகானே, தவான் ஆகியோர் விளையாடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
கோலி கடந்த தொடரில் சொதப்பியது போல் இல்லாமல் இம்முறை சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று நம்பலாம். ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் அணிக்கு வெற்றி நிச்சயம்.
 
பந்திவீச்சில் மோகித் சர்மா, புவனேஷ்வர், ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர். இம்முறை அஷ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஜடேஜா, அமித் மிஸ்ரா அசத்தலாம். 
 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் காயத்தால் விலகியது பெரும் பின்னடைவு ஆகும். கேப்டன்  பிராவோ, சமி, போலார்டு ஆகியோர் அசத்தலாம். பந்துவீச்சில் சுனில் நரைன் இல்லாதது, இந்திய அணிக்கு சாதகம்தான். இருப்பினும், வேகப்பந்துவீச்சில் டெய்லர், கீமர் ரோச், ராம்பால் ஆகியோர் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கின்றனர்.