வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 24 ஜனவரி 2016 (15:23 IST)

மர்லின் மன்ரோ - மாறாத இளமை (படத்தொகுப்பு)

ஹாலிவுட் கனவுக் கன்னி மர்லின் மன்ரோவின் அபூர்வ படங்கள் லண்டனில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றின் தொகுப்பு (படங்கள் மில்டன் எச்.கிரீன் மற்றும் டக்லஸ் கிர்க்லண்ட்)



தனது நாட்டிய அசைவுக்கான உத்தரவை எதிர்நோக்கும் பாலே நாட்டிய கலைஞராக மர்லின் மன்ரோ (நியூயார்க்கில் 1954 படம்)



மரிலின் மன்ரோ 1926 ஜூன் முதல் நாள் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நோர்மா ஜீன் மோர்டென்சன். 1946ல் 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்துக்காக முதல் ஒப்பந்தம் போட்டபோதுதான் தன் பெயரை மர்லின் மன்ரோ என்று மாற்றினார்.

1962ல் இறந்த மரிலின் மன்ரோ, இறப்புக்குப் பின்னரும் ரசிகர்களை சிந்தனைகளை வசீகரித்தார். படத்தில் ஒரு பிக்கினீஸ் நாயுடன் மர்லின்.(1955 படம் மில்டன் எச்.கிரீன்)
 
 


புகைப்படத்தில் அசாதாரணமாக மிளிரும் தன்மை மர்லினுக்கு இருந்தது. அதுதான் அவரை ஒரு நட்சத்திரமாக்கியது. மேலும்,அவரைப் படமெடுத்தவர்களையும் பிரபலமாக்கியது (படம் : In a Black Derby and Not Much Else, நியு யார்க், 1956)



'மர்லின் மன்ரோவுடன் ஒரு மாலை' என்று தலைப்பிடப்பட்ட தொடரில் படுக்கையில் இருந்து பல கவர்ச்சியான போஸ்களில் மர்லின் மன்ரோ


 


புகைப்படக் கலைஞர் கிர்க்லாண்ட் எடுத்த புகைப்படங்கள் மர்லின் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த ஒரு சில கடைசி சந்தர்ப்பங்களில் ஒன்று. தனக்கும் கேமராவுக்கும் இடையே ஒரு பட்டுத்துணியைத் தவிர வேறுஒன்றும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடக்கும் மர்லின்



புகைப்படக் கலைஞர் மில்டன் எச்.கிரீன் 1985ல் இறந்தார். அவர் 1953ல் எடுத்த இப்படத்தில் பாறையில் அமர்ந்திருக்கும் மர்லின் மன்ரோ



அமெரிக்க ஏர்லைன் புகைப்படத் தொடருக்காக மர்லின் மன்ரோ. 1956ல் எடுக்கப்பட்டது.



'ப்ளேயிங் வித் அ ரெட் வெய்ல்' என்ற புகைப்படம் 1957ல் மில்டன் எச்.கிரீன் எடுத்தது.



வாடிக்கையாளர்களைக் கவர காத்திருக்கும் விலை மாது போன்ற ஒரு போஸில் ( தெ ஹூக்கர், லாஸ் ஏஞ்சலஸ், 1956, படம் மில்டன் கிரீன்)



ஜெண்ட்ல்மென் ப்ரெஃபர் ப்லோண்ட்ஸ், படத்தில், வெள்ளை ரோம உடையில் மர்லின். 1955 படம்.