வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By ரவிவர்மா
Last Updated : வெள்ளி, 20 ஜூன் 2014 (17:19 IST)

கானா பாலாவின் ‌பிரபல பாட‌ல்க‌‌ள் - ஒரு தொகுப்பு

கானா பாலா, தமிழ்த் திரையுலகில் உருவாகியுள்ள புதிய நட்சத்திரம். இசையமைப்பாளர் தேவாவின் கானா பாடல்களு‌‌க்கு‌ப் ‌பிறகு, கானா பாடல்களால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார் கானா பாலா எனும் பால முருகன்.
 
2014 ஜூ‌ன் 20 ‌அன்று பிற‌ந்தநா‌ள் காணு‌ம் 45 வயதான கானா பாலாவின் பல பாடல்கள் பிரபலம் அடைந்துள்ளன.  
2012ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி, நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா பாடல்களால் பிரபலமானவர். 
 
2007 ஆம் ஆண்டே பிறகு என்ற படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனாதை பாலா என்ற பெயரில் 'பதினோரு பேரு ஆட்டம்', 'உன்னைப் போல பெண்ணை' என்ற பாடல்களையும், 2008 ஆம் ஆண்டு தொடக்கம் படத்தில் 'ஃபோனப் போட்டு' என்ற பாடலையும், வேதா படத்தில் 'சிக்கு புக்கு ரயிலு' என்ற பாடல்களையும் பாடியவர். 
 
இனி, அவர் பாடி பிரபலமான பாடல்களை இங்கே பார்ப்போம். 

பட‌ம் -  அ‌ட்ட‌‌க‌த்‌தி 
இசை -  சந்தோஷ் நாராயணன்
பாடியவ‌ர் - கானா பாலா
ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
 
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா 
அவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துறா
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா
அவ பாவாடை ராட்டினமாக சுத்துறா
 
 

பட‌ம் -  அ‌ட்ட‌‌க‌த்‌தி 
இசை - சந்தோஷ் நாராயணன்
வ‌ரிக‌ள் - கானா பாலா
பாடியவ‌ர் - கானா பாலா
நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
நடுகடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
 
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா?
முடியாத காரியங்கள் நறைய இருக்குதாம்..
அ‌ழியாத அனுபவங்கள் அதுல கடைகுதாம்..
 

பட‌ம் -  க‌ண்ணா ல‌ட்டு ‌தி‌ன்ன ஆசையா
இசை -  எ‌ஸ் தம‌ன்
வ‌ரிக‌ள் - கானா பாலா
பாடியவ‌ர்க‌ள் - கானா பாலா, முகே‌ஷ்
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்
கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன் 
நானு உங்க வீட்டுல 
பெட்ரோல் இல்லாத காராட்டம் 
நின்னேன் ரோட்டுல
 

படம் - உதயம் NH4
இசை - ஜீ.வி.பிரகாஷ்
பாடியவர் - கானா பாலா
ஓரக் கண்ணால என்ன ஓரங்கட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்கிறா
வானவில்லாட்டம் வந்து எட்டிப் பார்க்குறா
வளைச்சு போட்டேன்னா ஒரு சோக்கு ஃபிகரடா 
 
 

படம் - சூது கவ்வும் 
இசை -  சந்தோஷ் நாராயணன்
வரிகள் - கானா பாலா
பாடியவர்கள் - கானா பாலா, அந்தோணி தாசன்
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி
 
கொட புடுச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தலகாலு புரியல
தலகீழ நடக்குறேன் 
 

படம் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இசை - சித்தார்த் விப்பின்
வரிகள் - லலிதானந்த்
பாடியவர் - கானா பாலா 
ஏன் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்குத் தெரியல
அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி புடிக்கல 
ஆனாலும் அவள மறக்க முடியல
 
இவை த‌விர, ‌பீ‌ட்சா, பரதே‌சி, சே‌ட்டை, ப‌ட்ட‌த்துயானை உ‌ள்‌ளி‌ட்ட பல பட‌ங்க‌ளிலு‌ம் கானா பாலா பாடியு‌ள்ளா‌ர். இள‌ம் இய‌க்குன‌ர் அ‌ட்‌லி‌யி‌ன் ராஜா ரா‌ணி பட‌த்‌திலு‌ம் ஏ பா‌ப்பா ஏ‌ன் சோ‌க்கு பா‌ப்பா எ‌ன்ற பாடலையு‌ம் கானா பாடியு‌ள்ளா‌ர். 
 
கானா பாலாவின் பாடல்கள், பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றன. எளிமையும் வசீகரமும் கொண்ட இவரது பாடல்கள், மக்களை ஈர்ப்பதில் வியப்பில்லை.