சொர்க்கத்தின் குழந்தைகள்

webdunia photoWD
குழந்தைகளின் உளவியலை ஆராயும் த்ருஃபோவின் திரைப்பட‌ங்களிலிருந்து பல வகைகளில் மாறுபட்டவை ஈரானிய திரைப்பட‌ங்கள். குழந்தைகளின் அக உலகிற்கு இணையாக நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை ஈரானிய திரைப்பட‌ங்கள்.

இதற்கு பொருத்தமான திரைப்படம் என்று இயக்குனர் ம‌ஜித் ம‌ஜிதியின் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படத்தை கூறலாம். 1987-க்குப் பிறகு ஈரானிய பண்பாட்டுத்துறை திரைப்பட‌ங்களுக்கு ஆதரவளிக்கும் சில விதிமுறைகளை உருவாக்கியது. இந்த சுதந்திரப் பின்னணியில் உருவான மசூத் கிமியாய், நாசர் டக்வாய், அப்பாஸ் கியாரஸ்தமி ஆகிய இயக்குனர்கள் உலகத்தரமான திரைப்பட‌ங்களை இயக்கினர். இவர்களின் தாக்கத்தால் பல இளம் இயக்குனர்கள் ஈரானிய சினிமாவுக்கு வளம் சேர்த்தன. அவர்களில் முக்கியமானவர் இயக்குனர் ம‌‌ஜித் ம‌ஜிதி.

1997 ம் வருடம் இவர் இயக்கிய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் மான்ட‌ரில் உலகத் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை பெற்றது. இந்தப் படம் ஏற்படுத்திய அதிர்வு 3 நாட்கள் தன்னை தூ‌ங்க விடாமல் செய்ததாக கூறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். தனக்குப் பிடித்தமான பத்து திரைப்பட‌ங்களில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பாலுமகேந்திரா.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம் அண்ணன் த‌ங்கையான ஒரு சிறுவனையும், ஒரு சிறுமியையும் பற்றியது.

webdunia photoWD
அலி எனும் சிறுவன் தனது த‌ங்கையின் கிழிந்த ஷுக்களை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான் அலி. உருளைக்கிழ‌ங்கு வா‌ங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே ஷுவை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் ஷுவையும் எடுத்துச் செல்கிறான்.

ஷு தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என த‌ங்கை ‌ாராவிடம் கூறுகிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. அலியின் தாய் குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர அவள் நோயாளியும்கூட. அலி, ாராவின் தந்தையோ நிரந்தர வேலையில்லாதவர். ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பவர்.

Webdunia|


இதில் மேலும் படிக்கவும் :