1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 29 மார்ச் 2014 (15:43 IST)

வித்யாபாலன் கர்ப்பம் என்று நான் நினைக்கவில்லை

ககானி படத்தை இயக்கிய சுஜாய் கோஷின் புதிய படம் துர்கா ராணி சிங். இந்தப் படத்தில் 14 வயது பெண்ணின் தாயாக நடிக்க கங்கனா ரனவத்திடம் கேட்டுள்ளார். படத்தின் கதை பிடித்திருப்பதாக கூறிய கங்கனா இன்னும் தனது சம்மதத்தை கூறவில்.... ஸாரி, நேற்று தனது சம்மதத்தை கூறிவிட்டார்.
துர்கா ராணி சிங்கில் நடிக்க சுஜாய் கோஷ் முதலில் அணுகியது ககானி ஹீரோயின் வித்யாபாலனை. ககானி படம்தான் வித்யாபாலனை பாலிவுட்டில் ஹீரோவுக்கு நிகராக உயர்த்தியது. இருந்தும் சுஜாய் கோஷின் ஆஃபரை வித்யாபாலன் ஏற்கவில்லை. நடிக்க மறுத்துவிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து சில காஸிப் எழுத்தாளர்கள் வித்யாபாலன் கர்ப்பமாக இருக்கிறார், அதனால்தான் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று எழுதினர். இதுபற்றி சுஜாய் கோஷிடமும் கேட்கப்பட்டது. வித்யாபாலன் ஒரு ப்ரேக் எடுக்க விரும்பினார். மற்றபடி அவர் கர்ப்பமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை என சுருக்கமாக முடித்துக் கொண்டார் சுஜாய்.
 
ஸோ, வித்யாபாலன் கர்ப்பம் கிடையாது.