1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha Priya
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:29 IST)

ரோஹித் ஷெட்டியின் அடுத்த அதிரடி

ரோஹித் ஷெட்டியின் சென்னை எக்ஸ்பிரஸை தொடர்ந்து சிங்கம் ரிட்டர்ன்ஸும் ஹிட்டாகியுள்ளது. 100 கோடியை சிங்கம் ரிட்டர்ன்ஸ் அனாயாசமாக கடந்துள்ளது.
இதையடுத்து அவர் இயக்கப் போகும் படத்திற்குப் பின்னால் நிறைய சுவாரஸியங்கள் உள்ளன.
 
1989 இல் சுபாஷ் கய் இயக்கத்தில் வெளியான படம் ராம் லகான். அனில் கபூர், டிம்பிள் கபாடியா, மாதுரி தீக்ஷித், ஓம்பூரி நடித்த இந்த‌ப் படத்தை ரீமேக் செய்யும் உரிமையை சுபாஷ் கய்யிடமிருந்து ஐந்து கோடிக்கு வாங்கினார் கரண் ஜோ‌ஹர். இந்த ரீமேக்கைதான் ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்.
 
2016 இல் வெளியாகவிருக்கும் இந்த ரீமேக்கை கரண் ஜோ‌ஹரின் தர்மா புரொடக்ஷனும் சுபாஷ் கையின் முக்தா ஆர்ட்ஸும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
கரண் ஜோ‌ஹர் தற்போது ஆங்கில வாரியர் படத்தை அக்ஷய் குமார், சித்தார்த் மல்கோத்ராவை வைத்து தயாரித்து வருகிறார். அதையடுத்து சல்மான் கான் நடிக்கும் Shuddhi படத்தை தயாரிக்க உள்ளர்.