1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (18:17 IST)

நேரடி மோதலில் சைஃப் அலிகான், அக்ஷய் குமார்

இரண்டு மாஸ் ஹீரோக்களின் பிரமாண்ட படங்கள் ஒரே நாளில் வெளியானால் என்னவாகும் என்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கே தெரிந்ததுதான். இரண்டு படங்களின் வசூலும் அடிவாங்கும். அப்படியொரு நேரடி மோதலில் குதித்துள்ளது அக்ஷய் நடிக்கும் கப்பார்.
சஜித் நடியட்வாலா தயாரிப்பில் பேன்டம் படத்தில் சைஃப் அலிகான், கத்ரினா கைஃப் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை 2015 ஏப்ரல் 3 வெளியிடுவதாக ஏற்கனவே முறைப்படி அறிவித்தனர். இந்நிலையில் அக்ஷய் குமாரின் கப்பார் படத்தையும் அதே தேதியில் வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி அறிவித்துள்ளார். 
பேன்டம் வெளியாகும் அதே நாளில் கப்பார் படத்தை வெளியிட்டால் இரு படங்களும் பாதிக்கப்படும். அதற்கு அக்ஷய் குமாரே ஒப்புக் கொள்ள மாட்டார் என இந்திப் படவுலகில் பேச்சு உள்ளது. தவிர, சீனியாரிட்டி படியும் பேன்டம் படத்துக்குதான் ஏப்ரல் 3 படத்தை வெளியிடும் உரிமை உள்ளது.
 
அக்ஷய் நடித்துள்ள கப்பார் தமிழ் ரமணா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.