வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By John
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2014 (15:27 IST)

தோல்விடைந்தால் சம்பளம் ரிட்டர்ன்

இம்ரான் கான் அடுத்த இந்தி சூப்பர் ஸ்டாராக வருவார் என்று பார்த்தால் அடுத்தடுத்த தோல்விகள் மனிதரை அதால பாதாளத்துக்கு தள்ளுகிறது. இந்நிலையில் தனது சம்பளம் குறித்து இனிப்பு தடவிய ஸ்டேட்மெண்டை விடுத்துள்ளார்.
இம்ரான் கான் படத்தைப் பொறுத்தே சம்பளம் பெற்றுக் கொள்கிறாராம். படம் வெற்றி பெற்றால் அதிக சம்பளம், தோல்வி அடைந்தால் வாங்கிய சம்பளத்தில் கணிசமான பகுதியை திருப்பித் தருவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்,
 
சினிமாவில் எனக்கு பணம் முக்கியமில்லை.
 
சம்பளத்தை வைத்து படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை என்றும் கதையும், கேரக்டரும் பிடித்திருந்தால் சம்பளம் ஒரு பொருட்டில்லை எனவும் அவர் கூறினார். இதனால் தயாரிப்பாளர்களின் ரிஸ்க் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டார். படம் வெற்றி பெற்றால் லாபத்தில் சின்ன சதவீதத்தை வாங்கிக் கொள்வார். தோல்வியடைந்தால் வாங்கிய சம்பளத்தில் கணிசமான பகுதி ரிட்டர்ன்.
 
பல தோல்விகளுக்குப் பிறகும் இம்ரான் கைவசம் படங்களிருப்பதற்கு இந்த சம்பள விவகாரம்தான் காரணமாம்.
 
மற்றவர்களும் இதனை முயற்சிக்கலாம்.