1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (17:14 IST)

திருப்தி வரும்வரை விடமாட்டார்

அனுராக் காஷ்யப் 100 சதவீத திருப்தி வரும்வரை விட மாட்டார் என நடிகர் கே கே மேனன் தெரிவித்துள்ளார்.
அனுராக்கின் ப்ளாக் ப்ரைடே, குலால் உள்பட 4 படங்களில் கே கே மேனன் நடித்துள்ளார். இன்னும் வெளிவராமலிருக்கும் அனுராக் காஷ்யபின் பாம்பே வெல்வெட் படத்தில் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார்.
 
நவம்பர் 28 வெளியாக வேண்டிய படத்தை அனுராக் அடுத்த வருடம் மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார். நியாயமாக படத்தில் பணியாற்றியவர்கள் அதிருப்தி அடைந்திருக்க வேண்டும். ஆனால் பாம்பே வெல்வெட் பட விஷயத்தில் எந்த அதிருப்தியுமில்லை.
 
படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால்தான் பட வெளியீட்டை தள்ளி வைத்ததாக அனுராக் கூறியிருந்தார். அதுபற்றி கருத்து தெரிவித்த கே கே மேனன், 100 சதவீத திருப்தி வராமல் படத்தை அனுராக் காஷ்யப் வெளியிட மாட்டார். படம் 1960 -களில் நடக்கிறது. அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வருவது சாதாரணமில்லை என தெரிவித்துள்ளார்.
 
ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா பாம்பே வெல்வெட்டில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.