வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By John
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2014 (15:38 IST)

சல்மானுடன் நடிப்பது தனி கிக்

இப்படி சொல்கிறவர் எந்த நடிகையுமில்லை, நடிகர். கிக் படத்தில் சல்மான்கானுடன் நடிப்பதைதான் இப்படி வியந்து பேசினார் நடிகர் நவாசுதீன்.
சல்மான்கான் கிக் படத்தில் பிஸியாக இருக்கிறார். இது தெலுங்கில் இதே பெயரில் - கிக் - வெளிவந்த படம்தான். தமிழில் இதனை ஜெயம் ராஜா தில்லாலங்கடி என்ற பெயரில் தம்பி ஜெயம் ரவியை வைத்து எடுத்தார். தெலுங்கில் கிடைத்த வெற்றி தமிழில் கிடைக்கவில்லை.
 
அந்த கிக் என்ற தில்லாலங்கடி என்ற படத்தையே கிக் என்ற பெயரில் சல்மான் நடிப்பில் உருவாக்கி வருகிறார்கள். தெலுங்கு மற்றும் தமிழில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் ஷாம். இந்தியில் நவாசுதீனுக்கு ஷாம் நடித்த அதே வேடம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் மனிதர் செம மூடி. என்னுடைய கேரக்டர் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்.
 
ஜெய்ஹோ வில் வெற்றியை தவறவிட்ட சல்மானுக்கு கிக் பூஸ்டாக அமையுமா இல்லை தில்லாலங்கடி ரிசல்ட்தான் கிடைக்குமா?
 
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.