1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 9 நவம்பர் 2014 (10:05 IST)

நாங்க நல்ல ப்ரெண்ட்ஸ் - அனுராக் பற்றி முன்னாள் மனைவி

2009 -இல் இயக்குனர் அனுராக் காஷ்யப் தேவ் டி படத்தை எடுத்தார். கல்கி கோச்லின் ஹீரோயின். அதற்கு முன் கோக் விளம்பரத்தில் பிரபலமாக இருந்தவரை இந்தப் படம்தான் சினிமா ரசிகர்களிடம் பரவலாக கொண்டு சேர்த்தது.
இரண்டு வருடங்கள் கழித்து அனுராக்கும், கோச்லினும் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே இன்டெலக்சுவல்ஸ். சென்ற வருடம் இதே நவம்பரில் இருவரும் பிரிவதாக அறிவித்து இன்றுவரை தனித்தனியாக வசித்து வருகின்றனர். இன்டெலக்சுவல்ஸ் இல்லையா... பிரிந்தாலும் தொடர்கிறது இவர்களின் நட்பு.
 
எங்களுக்குள் பரஸ்பரம் மரியாதையும் நல்ல நட்பும் இருக்கிறது. எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியவும்கூடும் என்று கல்கி கோச்லின் கூறியிருக்கிறார். அனுராக் தரப்பில் இதற்கு மௌனம் சம்மதமாக பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்டெலக்சுவல்ஸ் அதிக நாள் திருமண பந்தத்தில் இணைந்து இருப்பது இல்லை. போலவே, பிரிந்த பின் எதிரிகளாக பரஸ்பரம் சேற்றையும் வீசுவதில்லை. அன்பு என்ற இடத்தில் மதிப்பையும், தியாகம் என்ற இடத்தில் புரிதலையும் வைத்ததால் விளைந்த மாற்றம் இது. 
 
நல்ல மாற்றம் வரவேற்போம்.