1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (09:43 IST)

ராதிகா ஆப்தேயைத் தொடர்ந்து குறும்படத்தில் நடிக்கும் தாப்ஸி

சுஜாய் கோஷ் இயக்கியிருக்கும், அகல்யா குறும்படம் அனைவரையும் கவர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது. அந்த குறும்படத்தில் ராதிகா ஆப்தே சிறிது கவர்ச்சியாக நடித்திருந்தார்.
அகல்யாவுக்கு கிடைத்த வரவேற்பு வேறு பல இயக்குனர்களையும் குறும்படம் பக்கம் திருப்பியுள்ளது. திக்மன்சு துலியா ஒரு குறும்படத்தை இயக்குகிறார்.
 
இதில் நடிக்க முன்வந்திருக்கிறார் தாப்ஸி. திக்மன்சுவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நெடுநாள் விருப்பம் எனவும், அதனால் அவர் கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டதாக தாப்ஸி கூறினார்.
 
திக்மன்சுவின் குறும்படம் ஒரு காதல் கதை. தாப்ஸியுடன் நடிக்கப் போகிறவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.