மாடல் அழகி மரண வழக்கில் நடிகர் விக்ரம் கைது


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 7 ஜூலை 2017 (13:58 IST)
பிரபல மாடல் அழகி சோனிகா சவுகான் மரணம் தொடர்பான வழக்கில் பெங்காலி நடிகர் விக்ரம் சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.  

 

 
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மாடல் அழகியுமான சோனிகா சவுகான் மற்றும் பெங்காலி நடிகர் விக்ரம் சாட்டர்ஜி ஆகியோர் சென்ற விபத்துக்குள்ளானது. இதில் சோனிகா சவுகான் மரணமடைந்தார். விக்ரம் சாட்டர்ஜி காயங்களுடன் உயிர் பிழைத்துக்கொண்டார்.
 
அப்போது விக்ரம் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை என காவல்துறையினரிடம் தெரிவித்தார். ஆனால் சோனிகா பெற்றோர் விக்ரம் குடித்துவிட்டு காரை ஓட்டி தங்கள் மகளை கொன்றுவிட்டதாக தெரிவித்தனர்.
 
விபத்து நடந்த இரவு விக்ரமும், சோனிகாவும் கிளப்புக்கு சென்றுள்ளனர். அங்கு விகரம் குடித்த போது புகைப்படம் மற்றும் விடியோ கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் விக்ரம் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது என வழக்கு செய்தனர்.
 
மேலும் சோனிகா உயிரிழக்க விக்ரம்தான் காரணம் என நேற்று இரவு விக்ரமை காவல்துறையினர் கைது செய்தனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :