வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Lenin AK
Last Modified: சனி, 4 அக்டோபர் 2014 (16:18 IST)

ரொமான்டிக் காமெடியில் நடிக்கும் ஷாகித் கபூர்

ஷாகித் கபூரின் ஹெய்டர் நன்றாக எடுக்கப்பட்ட சுமாரான படம் என்ற வித்தியாசமான விமர்சனத்தை பெற்றுள்ளது. படத்தின் முதல்நாள் வசூல் ஆறரை கோடிக்கும் கீழ். விஷால் பரத்வாஜ் இயக்கிய ஒரு படம் விமர்சகர்களால் இவ்வளவு மோசமாக எதிர்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை.
ஷாகித் கபூரை பொறுத்தவரை அவரது முந்தைய வெளியீடான ரா...ராஜ்குமாரும் சரியாகப் போகவில்லை. தோல்விப் படம். ஹெய்டரும் தோல்வி என்பது பின்னடைவுதான்.
 
இந்நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஷாகித் கபூர், அம்ரிதா ராவ் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற இஷ்க் விஷ்க் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கென் கோஷ் எடுக்க திட்டமிட்டுள்ளார். 
 
சரியான ஸ்கிரிப்ட் அமைந்திருப்பதாகவும், ஸ்கிரிப்ட் முழுமையடைந்ததும் படப்பிடிப்புக்கு கிளம்ப இருப்பதாகவும் அவர் கூறினார். இஷ்க் விஷ்க் போலவே இதுவும் ஒரு ரொமான்டிக் காமெடியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.