வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: சனி, 27 செப்டம்பர் 2014 (10:08 IST)

காமினே இரண்டாம் பாகம் - தயாராகும் ஷாகித், விஷால் பரத்வாஜ் கூட்டணி

இந்தி சினிமாவின் பெருமைகளில் இயக்குனர் விஷால் பரத்வாஜும் ஒருவர். அவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே அட்டகாசமானவை.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி அவர் எடுத்த மெக்பூல், ஓம்காரா இரண்டும் மறக்க முடியாதவை. ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டை தழுவி அவர் எடுத்திருக்கும் படம் ஹெய்டர். ஷாகித் கபூர் நடித்துள்ளார்.
விஷால் பரத்வாஜின் காமினே படத்தில் ஷாகித் கபூர் இரு வேடங்களில் முன்பு நடித்திருந்தார். ஷாகித்தின் கரியரில் இன்றுவரை முக்கியமான படம் என்றால் அது காமினேதான். படம் ரசிகர்களாலும் அமோகமாக வரவேற்கப்பட்டது.
 
காமினேயின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் விஷால் பரத்வாஜ். அதனை ஷாகித் கபூரும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஹெய்டர் வெளியானதும் காமினே இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்டை முடிக்கும் பணியில் விஷால் பரத்வாஜ் ஈடுபடுவார் என ஷாகித் கூறியுள்ளார்.