செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 12 மே 2015 (10:04 IST)

மொரிஷியஸ் கடலில் சண்டையிடப் போகும் ஷாருக்கான்

உங்களுக்குப் பிடித்த காதல் படம் எது என்று இந்தியர்களிடம் கேட்டால், சரிபாதி பேர் தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே என்று ஷாருக்கான், கஜோல் நடித்தப் படத்தை சொல்வார்கள். மும்பையில் இந்தப் படம் தொடர்ச்சியாக பல வருடங்கள் ஓடி, உலக சினிமா சரித்திரத்தில் அதிகநாள் ஓடியப் படம் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
 
ஷாருக்கான், கஜோல் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பெயர் தில்வாலே. இன்னொரு காதல் ஓவியம் என்று ரசிகர்கள் நீங்கள் நினைக்கலாம். ஆனால், ரோஹித் ஷெட்டி என்ற பெயர் அதை அனுமதிக்கவில்லை.
நான் காதல் படம் எடுத்தால் அது சென்னை எக்ஸ்பிரஸ் போலாகிவிடுகிறது என்று சொன்னவர் ரோஹித் ஷெட்டி. அதாவது ரோஹித் ஷெட்டி, ஷாஜகானின் காதலை படமாக்கினால் அது ஹாலிவுட்டின் ட்ராய் படம் போல வெட்டும் குத்துமாகதான் இருக்கும். ஆக்ஷன் இல்லாமல் எதையும் எடுக்க விரும்பாதவர் ரோஹித் ஷெட்டி. அவர்தான் தில்வாலேயின் இயக்குனர்.
 
படத்தின் முதல் ஷெட்யூல்டை வருண் தவானை வைத்து கோவாவில் எடுத்தவர் அடுத்து மொரிஷியஸ் தீவுக்கு செல்கிறார். அங்கு அண்டர்வாட்டர் பைட் சீக்வென்ஸை எடுப்பதாக திட்டம். சண்டையிடப் போகிறவர் ஷாருக்கான்.
 
சாலையில் சுமோக்களை பறக்கவிடும் ரோஹித் எடுக்கும் முதல் அண்டர் வாட்டர் சண்டைக் காட்சி இது. பாலிவுட் ஆவலுடன் இந்த சண்டையை எதிர்பார்க்கிறது.