வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (09:44 IST)

ஷாருக்கானின் ஃபேன் பர்ஸ்ட்லுக்

மனீஷ்சர்மா இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும், ஃபேன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆதித்யா சோப்ராவின் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஃபேன் படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். 2016 ஏப்ரல் 15 -ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. 
 
மனீஷ் சர்மா இயக்கியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர். இரண்டு போஸ்டர்களிலும் ஷாருக்கானின் முகம் தெரியவில்லை. 
 
ஃபேன் படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிடும் முன்பே, இதற்கடுத்து வெளியாகவிருக்கும், ஷாருக்கின் ராயீஸ் படத்தின் டீஸரை வெளியிட்டனர். ராயீஸ் 2016 ரம்ஜானுக்கு வெளியாகிறது.