கதாநாயகியை வைத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த சல்மான்கான்

Aayush Sharma
Last Updated: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:40 IST)
பிரபல பாலிவுட் நடிகர் தனது டுவிட்டரில் பக்கத்தில் எனக்கு பெண் கிடைத்தது என்று பதிவிட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

 
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் 52 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐஸ்வர்ய ராய் தொடங்கி கேத்ரினா கைப் வரை பல நடிகைகளுடன் காதல் இருந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் இதுவரை யாரையும் திருமணம் செய்யவில்லை. இந்நிலையில் இன்று சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு பெண் கிடைத்தது என்று செய்த டுவீட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
 
பின்னர் சிறிது நேரம் கழித்து என் அடுத்த படத்திற்கு கதாநாயகி கிடைத்துவிட்டது என்று பதிவு செய்தார். ஆயுஷ் சர்மா சல்மானுக்கு அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :