வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (11:21 IST)

ஒரே படத்தில் மூன்று கான்கள் - கற்பனையே கலக்குதே

சமீபத்தில் நடந்த விழாவில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்கள் சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான் மூவரும் கலந்து கொண்டனர். அப்போது அமீர் கானிடம் மூன்று கான்களும் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர்,
மூன்று கான்களும் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும் என்று நானும் யோசித்தது உண்டு. உண்மையிலேயே அப்படியொரு ஸ்கிரிப்ட் அமைந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
 
சல்மான் கான், அமீர் கான் இடையே உரசல் இல்லை. பிரச்சனை சல்மானுக்கும் ஷாருக்கானுக்கும்தான். அதுவும் சல்மானின் தங்கையின் திருமணத்தில் வாலண்ட்ரியாக கலந்து கொண்டு அந்தப் பகையையும் புகையாக மாற்றி ஊதிவிட்டார் ஷாருக்.
 
எல்லாம் ஸ்மூத்தாகத்தானே இருக்கு. மூன்று கான்களும் இணைந்து நடிக்கும் கற்பனைக்கு அவர்களே கலர் அடிக்க ஆரம்பிக்கலாமே.