1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (15:35 IST)

வருகிறது தபாங் 3

சல்மான் கானின் தொய்ந்து போன மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்திய படம், தபாங். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் வெற்றியும், தமிழில் தோல்வியும் கிடைத்தது.
தபாங் 2 படமும் வெற்றிப் படம்தான். அதனால் அப்படத்தை சீக்கிரத்தில் கழற்றிவிட சல்மான் கானுக்கு மனசில்லை. தபாங் 3 விரைவில் தயாராகிறது.
 
ஈத் பண்டிகைக்கு வெளியாகும் எல்லா இந்திப் படங்களும் ஹிட் ஆகும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் கண்டிப்பாக ஒரு படத்தை ரிலீஸ் செய்வது சல்மானின் வழக்கம். இந்த வருடம் பஜ்ரங்கி பைஜான் வெளியாகிறது. 2013 -இல் சல்மான் படத்துக்குப் பதில் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியானது. படம் மரண ஹிட்.
 
அடுத்த வருடம் 2016 -இல் சல்மானின் சுல்தான் வெளியாகிறது. அதற்கு அடுத்த வருடம் 2017 -இல் தபாங்க 3 -ஐ வெளியிட முடிவு செய்துள்ளார்.