செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (14:40 IST)

முத்தக்காட்சியா? செல்லாது செல்லாது - கறார் சல்மான்

பேட் பாய் இமேஜ் இருந்தாலும் சல்மான் கான் முத்தக் காட்சி போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில்லை. அவர் நடிக்கும் படங்களில் மட்டுமின்றி தயாரிக்கும் படங்களிலும் இதுதான் அவரது பாலிசி.

 
1983 -இல் ஜாக்கி ஷெராஃப், மீனாக்ஷி சேஷாத்ரி நடித்த ஹீரோ படத்தை அதே பெயரில் சல்மான் கான் ரீமேக் செய்கிறார். அதாவது ஹீரோவின் தயாரிப்பு மட்டும் சல்மான். இயக்குவது நிகில் அத்வானி.
 
ஹீரோவில் நடிக்கும் சூரஜ், அதியாவுக்கு சின்னதாக முத்தக் காட்சி உள்ளது. இதைக் கேள்விப்பட்ட சல்மான், உடனடியாக அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க சொல்லிவிட்டார். சும்மா உதடை வச்சு உரசுற சீன்தான் என்று நிகில் அத்வானி சொன்ன சமாதானத்தை சல்மான் ஏற்கவில்லை. உரசுறதோ இடிக்கிறதோ எதுவாயிருந்தாலும் செல்லாது என்று சொல்ல, முத்தக்காட்சி இப்போது படத்திலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறது.