முன்னாள் காதலியுடன் மீண்டும் இணையும் சல்மான் கான்


Sugapriya Prakash| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (14:36 IST)
சல்மான் கான் சிறையில் இருந்த போது அவரை தேடி வந்து பார்த்தவர் நடிகை, கத்ரினா கைப். சல்மானின் முன்னாள் காதலிகளில் ஒருவர். சல்மான் கானுடன் பிரிவு ஏற்பட்ட பிறகு அவருடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

 
 
நயன்தாராவே சிம்புடன் நடிக்கும் காலம் இது. கத்ரினா, சல்மான் ஊடல் எத்தனை நாளைக்கு? சல்மான் கானின் புதிய படம், டைகர் ஜிந்தா ஹே படத்தில் அவருடன் ஜோடியாக கத்ரினா நடிக்கிறார்.
 
சல்மான் கான் தற்போது நடித்துவரும் ட்யூப்லைட் படம் முடிந்ததும், மார்ச் 15 -இல் ஆஸ்திரியாவில் இந்தப் படம் தொடங்குகிறது. ஏக் த டைகர் படத்தின் இரண்டாம் பாகமான இதனை அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். டிசம்பர் 22 படம் வெளியாகும் என்று படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :