1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (16:04 IST)

ஜப்பானில் வெளியாகும் இந்தி ஸோம்பி படம்

வைரஸால் தாக்கப்பட்ட மனிதர்கள் பேய்களைப் போல மற்றவர்களை கடித்து அவர்களையும் தங்களைப் போல மாற்றிக் கொள்ளும் படங்கள் ஹாலிவுட்டில் பிரபலம். இந்த ஸோம்பிஸ் வகைப் படங்களில் சமீபத்தில் பிராட் பிட் நடிப்பில் வெளிவந்த, வோல்ட் வார் ஸீ திரைப்படம் உலக அளவில் நல்ல கலெக்ஷனை பெற்றது.
இந்தியில் வெளியான முதல் ஸோம்பி திரைப்படம், சயிப் அலிகான் நடித்த, கோ கோவா கான். இந்தியாவில் சுமாராகப் போன இந்தப் படத்தை வரும் 21 -ஆம் தேதி ஜப்பானில் வெளியிடுகின்றனர்.
 
சமீபமாக இந்திப் படங்கள் அதிகளவில் ஜப்பானில் வெளியாகிறது. ஸோம்பிஸ் சர்வதேச சப்ஜெக்ட் என்பதால் கோ கோவா கானை ஜப்பானில் வெளியிடுவதாக ஈரோஸ் இன்டர்நேஷனல்ஸ் தெரிவித்துள்ளது.