வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (16:30 IST)

சல்மான்கானின் ஜுகல் பந்தியில் சைப் அலிகான்

சைப் அலிகான் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் சமீபத்திய காலங்களில் ஓடவில்லை. ரசிகர்கள் விஷயத்தில் வறுமையில் தள்ளாடினாலும் வாய்ப்புகள் இன்னும் ஸ்டெடியாகவே வருகின்றன.
ஹீரோ, பஞ்ரங்கி பஜான் படங்களை தயாரித்த சல்மான் அடுத்து ஜுகல் பந்தி என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், சைப் அலிகான்.
 
படத்தை சமீர் சர்மா இயக்குகிறார். லவ் சுவ் தே சிக்கன் குரானா படத்தை இயக்கியவர் சமீர் என்பது குறிப்பிடத்தக்கது.