வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (11:03 IST)

சைப் அலிகானின் ஹேப்பி என்டிங் - அன்ஹேப்பி ஓபனிங்

சமீப காலத்தில் சைப் அலிகான் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் ஓடவில்லை. இப்படியொருசூழலில்தான் திரைக்கு வந்தது ஹேப்பி என்டிங். 
சைப் அலிகான், இலியானா, கல்கி கோச்லின், கோவிந்தா நடித்திருக்கும் இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கும் என்று தெரியவில்லை. சைப் மீதான பழைய கிரேஸ் இந்திப்பட ரசிகர்களுக்கு இப்போது போயே போச். படம் வெளியான இன்று பாதிக்கும் மேல் திரையரங்குகள் காற்று வாங்கியதாக மும்பை மீடியா கூறுகிறது.
 
சரி, படம் எப்படி?
 
ஒரு கோஷ்டி போர் என்கிறது. இன்னொரு கோஷ்டி, சமீபத்தில் வெளிவந்ததில் வித்தியாசமான படம் என்கிறது. எப்படியிருந்தாலும் 100 கோடியை படம் எட்டுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
 
அசின் மாதிரி இந்தப் படத்தோடு இலியானாவின் பாலிவுட் வாழ்க்கைக்கு என்ட் கார்ட் போடப்படலாம்.