Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெட்கம்கெட்ட செல்ஃபியை வெளியிட்டு வாங்கி கட்டிகொண்ட பிரபல நடிகை

Sasikala| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (12:26 IST)
தங்கல் நடிகை சேலை கட்டி இடுப்பு தெரியும்படி செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதை நெட்டிசன்கள்  விமர்சித்து ட்வீட் செய்துள்ளனர்.

 
அமீர் கானின் ‘தங்கல்’ படத்தில் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். அவர் தற்போது மீண்டும் அமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் சனா செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் சேலை கட்டி இடுப்பு தெரியும்படி  புகைப்படம் எடுத்து வெட்கம்கெட்ட செல்ஃபி என்று தலைப்பிட்டு அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த  நெட்டிசன்கள் இப்படியா சேலை அணிந்து புகைப்படம் எடுப்பது. வெட்கமே இல்லையா?. முதலில் ஒழுங்காக சேலை கட்ட கற்றுக் கொள்ளுங்கள் என்று விமர்சனம் செய்துள்ளனர். உங்களுக்கே தெரிந்ததால்தான் வெட்கம்கெட்ட செல்ஃபி என்று தலைப்பு  வைத்துள்ளீர்கள். ஒழுங்காக உடை அணிய கற்றுக் கொள்ளுங்கள் என்றும், ஏற்கனவே பாத்திமா சனா ஷேக் வெளிநாட்டில்  பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களிம் விமர்சனத்துக்கு உள்ளானார்.
 
ஏற்கனவே நோன்பு நேரத்தில் முஸ்லீமாக இருந்து கொண்டு இப்படியா பிகினி புகைப்படத்தை வெளியிடுவது என பலரும்  விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :