ரன்வீர் சிங்குடன் ஜாலியாக நடனமாடிய சத்குரு

ranveer
Last Updated: ஞாயிறு, 22 ஜூலை 2018 (20:42 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் சத்குரு மேடையில் ஆனந்த நடனமாடினார். இதனை ரன்வீர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 21 தேதி பெங்களூர் ஐஐஎம் நடத்திய லீடர்ஷிப் கான்கிளேவ் நிகழ்ச்சி தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
 
மேடையில் ரன்வீர் சிங்கும், சத்குருவும் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் எழுந்து நின்று கை தட்டினர். இந்த வீடியோவை ரன்வீர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :