1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: சனி, 29 நவம்பர் 2014 (14:49 IST)

நான்சென்ஸ் - சிரிப்பதற்கு ஒரு படம்

சிரிப்பதற்கு சென்ஸ் தேவையில்லை. அதனால் இப்படியொரு பெயர் வைத்திருக்கலாம். டி சீரிஸ் பூஷன் குமார் அடுத்து தயாரிக்கும் காமெடிப் படத்துக்கு வைத்திருக்கும் பெயர்தான், நான்சென்ஸ்.
பாலிவுட் தமிழ் போல் கிடையாது. எந்தப் பெயரை வேண்டுமானாலும் வைக்கலாம். இந்தி அழிந்துவிடாது என்ற நம்பிக்கை. நான்சென்ஸ் படத்தில் ஷர்மான் ஜோஷி, ஷரின் கான், வீர் தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ஷரின் கானுக்கு பத்திரிகையாளர் வேடம். மற்ற இருவரும் என்ஜிஓக்கள்.
 
விளம்பரப் படங்கள் எடுத்து வந்த அஸ்வின் ஷெட்டி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார். அவரது வொர்க் எனக்குப் பிடித்திருந்தது என்று அஸ்வினை இயக்குனராக்கியதற்கு காரணம் கூறியுள்ளார் தயாரிப்பாளர் பூஷன் குமார்.
 
2015 தொடக்கத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.