1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (11:14 IST)

கிக் 2 - சாத்தியமே இல்லையாம்

பிரபல தயாரிப்பாளராக இருந்த சஜித் நடியட்வாலா இயக்குனரான படம் சல்மான் கான் நடித்த கிக். தெலுங்கில் வெளியான கிக் படத்தின் தழுவலான இது (தமிழில் தில்லாலங்கடி) மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 300 கோடியை தொடும் அளவுக்கு இந்தியாவில் படம் வசூலித்தது. முக்கியமாக ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயரால் இந்தப் படத்தின் வசூலை முந்த இயலவில்லை.
 
கிக் 2 படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவர்களின் ஆசைக்கேற்ப சில பத்திரிகைகள் கிக் 2 ஸ்கிரிப்ட் எழுதுவதில் சஜித் நடியட்வாலா பிஸி என்று செய்தி வெளியிட்டன. பட், சஜித் அதனை மறுத்துள்ளார்.
 
அடுத்த நாலு வருடங்களுக்கு நான் பிஸி. கிக் 2 பற்றி யோசிக்கவே நேரமில்லை. ஒவ்வொரு வருடமும் நாலு பெரிய படங்கள் என்னுடைய பேனரில் வெளியாகிறது. அவற்றுக்கே எனக்கு நேரம் போதாவில்லை என தெரிவித்துள்ளார்.
 
அப்படியானால் கிக் 2...? 
 
சஜித்துக்கு பதில் வேறெnருவர் களத்தில் இறங்கினால்தான் உண்டு.