1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (14:38 IST)

இந்தியில் தயாராகும் உன் சமையல் அறையில் - பிரகாஷ்ராஜ் வேடத்தில் நானா படேகர்

ஆஷிக் அபு இயக்கத்தில் லால், ஸ்வேதா மேனன், ஆசிப் அலி, மைதிலி நடித்த படம், சால்ட் அண்ட் பெப்பர். நடுத்தர வயது கழிந்த இரு சாப்பாட்டு ப்ரியர்களின் காதல் கதையிது. மலையாளத்தில் ஹிட்டடித்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் பிரகாஷ்ராஜ் ரீமேக் செய்தார். இயக்கமும், நடிப்பும் அவரே. தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் படம் வெளியானது.
 
சால்ட் அண்ட் பெப்பரின் ஆன்மாவை இயக்குனர் பிரகாஷ்ராஜால் புரிந்து கொள்ள முடியாது போனதால் படம் தமிழில் ப்ளாப்பானது. தெலுங்கில் சுமாராகப் போனது.
 
இந்தப் படத்தை இந்தியில் இயக்குகிறார் பிரகாஷ்ராஜ். நல்லவேளையாக அவர் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் நானா படேகர் நடிக்கிறார். கதை பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நானா படேகர்.
 
மலையாளத்தில் கிடைத்த வெற்றி இந்தியிலாவது சாத்தியமாகுமா?