இந்த வருட இறுதிக்குள் இரண்டாவது திருமணம் - மனிஷா கொய்ராலா முடிவு

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (13:09 IST)
இந்த வருட இறுதிக்குள், தன்னை மனதார நேசிக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.

 
மனிஷா கொய்ராலாவுக்கு கடந்த 2010 -இல் சாம்ராட் தகால் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. இரண்டே வருடங்களில் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்தனர். சமீபத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு யுஎஸ் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். உடல்நிலை தேறிய நிலையில் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
 
அடுத்த வருடம் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்கவிருப்பதாக கூறியிருப்பவர், தன்னை மனதாரா விரும்பும் ஒருவரை இந்த வருட இறுதிக்குள் இரண்டாவதாக திருணம் செய்யவிருப்பதாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :