வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (14:23 IST)

ட்ரூ டிடெக்டிவ் சீரியலில் நடிக்கவில்லை - இர்பான் கான்

ஹாலிவுட் படத்தில் இந்திய முகம் தேவைப்பட்டால் முன்பு நஸ்ருதின் ஷாவை அழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது, இர்பான் கான். லைஃப் ஆஃப் பையில் நடித்த பிறகு இர்பானின் ஹாலிவுட் டிமாண்ட் அதிகரித்துள்ளது.


 

 
இப்போதும்கூட புடாபெஸ்டில் ஹாலிவுட் படம், இன்ஃபெர்னோவின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில் இன்னொரு செய்தி. யுஎஸ்ஸின் பிரபலமான ட்ரூ டிடெக்டிவ் சீரியலின் இரண்டாவது செஷனில் இர்பான் கான் நடிக்கிறார்.
 
ஆனால், இதனை இர்பான் கான் மறுத்துள்ளார். எந்த சீரியலிலும் நடிக்க நேரம் எனக்கு இல்லை, ட்ரூ டிடெக்டிவ் சீரியலில் நான் நடிக்கவில்லை என  கூறியுள்ளார்.