Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர்கள் செய்தால் ஜாலி நடிகைகள் செய்தால் குற்றமா? கங்கனா ரனவத்


Abimukatheesh| Last Updated: புதன், 20 செப்டம்பர் 2017 (15:49 IST)
சினிமா துறையில் ஆண்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அது ஜாலி, அதுவே பெண் செய்தால் குற்றமா? என கங்கனா ரவனத் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனவத் ஆணாதிக்கம் பற்றி தொடர்ந்து தைரியமாக பேசி வருகிறார். அதுவும் குறிப்பாக பாலிவுட் சினிமாவில் உள்ள அரசியல் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த கேங்ஸ்டர் படம் தனது தந்தைக்கு பிடிக்கவில்லை என்றும் அவரது தந்தையால் மகள் திரையில் நடித்த சில காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளர்.
 
மேலும் அவர் பாலிவுட் சினிமா துறை பற்றி கூறியதாவது:-
 
சினிமா துறையில் ஆண்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அது ஜாலி, அதுவே பெண் செய்தால் குற்றம். சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களின் மகன்கள் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தால் பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் அவர்களின் மகள்கள் பிகினி கூட அணிய முடியாது, போத்திக்கிட்டு இருக்க வேண்டும்.
 
நான் ஆண்களை வெறுப்பவள் இல்லை. எனக்கு தோழிகளை விட ஆண் நண்பர்களே அதிகம். ஆணுக்கு பெண் நிகர் இல்லை என்று கூறுவதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :