படப்பிடிப்பில் வாள் வீசிய ஜான்சி ராணிக்கு நெற்றியில் 14 தையல்


Abimukatheesh| Last Updated: வியாழன், 20 ஜூலை 2017 (14:54 IST)
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனவுத் சண்டை காட்சி படப்படிப்பின் போது வாள் வீசியதில் நெற்றியில் வெட்டுப்பட்டு 14 தையல்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 
பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் தனது புதிய படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக கடந்த மாதம் வாள் பயிற்சி மற்றும் குதிரை ஏற்றம் ஆகிய பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது கங்கனா நெற்றியில் வெட்டு விழுந்தது. 
 
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நெற்றியில் 14 தையல்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தொடர்ந்து படத்தில் வெட்டு விழுந்த தழும்புடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :