Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹாலிவுட் பாடகருக்கு நடனம் கற்றுக்கொடுக்க விரும்பும் பாலிவுட் நடிகை


Abimukatheesh| Last Modified வெள்ளி, 12 மே 2017 (16:38 IST)
பிரபல ஹாலிவுட் பாட்கர் ஜஸ்டின் பீபருக்கு, தான் நடனம் சொல்லித்தர விரும்புவதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.

 

 
பிரபல ஹாலிவுட் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்த இந்தியா வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த பீபர் மும்பையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகைகள் பலரும் கலந்துக்கொண்டனர். 
 
இந்நிலையில் விழாவிற்கு வருகை தந்த பாலிவுட் முன்னணி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் கூறியதாவது:-
 
ஜஸ்டின் பீபர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் ஈர்ப்பு உள்ளது. அவரை என்னௌடன் மும்பையை சுற்றிப்பார்க்க அழைத்து செல்ல விரும்புகிறேன். மேலும் அவருக்கு ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆட கற்று தந்து இருவரும் சேர்ந்து ஆடுவோம், என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :