வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2015 (09:41 IST)

இந்தியாவின் ட்ரான்ஸ்போர்ட்டர் யார்?

ட்ரான்ஸ்போர்ட்டர் உலகம் முழுவதும் உள்ள ஆக்ஷன்பட ப்ரியர்களை கவர்ந்த படம். இதன் மூன்று பாகங்கள் வெளியாகி நான்காவது பாகம் தயாராகி வருகிறது. இந்த நான்கிலும் ஜேஸன் ஸ்டெதமே நாயகன்.
 
இதனிடையில், ட்ரான்ஸ்போர்ட்டரின் முதல் பாகத்தை ரீ பூட் செய்தனர். கதைக்கருவை மட்டும் அப்படியே வைத்து கதையை, காட்சியை மாற்றி எடுப்பது ரீ பூட்.
 
எட் ஸ்கிரின் இதில் நாயகனாக நடித்தார். தி ட்ரான்ஸ்போர்ட்டர் - ரீபியூல்ட் என்ற பெயரில் வெளியான இப்படம், முந்தைய பாகங்கள் அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை.
 
நிற்க. இப்போதைய விஷயம், இந்தியில் ட்ரான்ஸ்போர்ட்டர் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், வருண் தவான் என மூன்று பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. நமது சாய்ஸ், அக்ஷய்.
 
யார் ட்ரான்ஸ்போர்ட்டர் ஆகிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.