1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (15:22 IST)

மீண்டும் பாலியல் தொழிலாளியாக நடிக்கும் கரீனா கபூர்

பாலியல் தொழிலாளி வேடத்துக்கும் கரீனா கபூருக்கும் அப்படியொரு பொருத்தம். தேடித்தேடி வருகிறது அப்படியான வாய்ப்புகள். ஏற்கனவே தல்லாஷ் உள்பட இரு படங்களில் கரீனா பாலியல் தொழிலாளி வேடம் ஏற்றிருக்கிறார். இப்போது மூன்றாவது.

ராஜ்குமார் குப்தா இயக்கும் படத்தில் கரீனா கபூர் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவொரு சைக்கலாஜிகல் த்ரில்லர். இதில் கரீனா கபூர் பாலியல் தொழிலாளியாக வருகிறார்.
 
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சைக்கலாஜிகல் த்ரில்லர் உருவாகிறது. இதுவொரு நாயகி மையப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.