ஜிஎஸ்டி-யின் விளம்பர தூதரானார் அமிதாப் பச்சன்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 20 ஜூன் 2017 (16:49 IST)
ஜிஎஸ்டி-யின் விளம்பர தூரகாக நடிகர் அமிதாப் பச்சனை மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் நியமித்துள்ளது. 

 
 
ஒரு தேசம் ஒரே சந்தை என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அமிதாப் பச்சன் ஜிஎஸ்டி குறித்த 40 விநாடி வீடியோ காட்சியில் நடித்துள்ளார். இந்த வீடியோ அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்பு ஜிஎஸ்டி-யின் விளம்பர தூதராக பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :