வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (16:08 IST)

படத்தயாரிப்பில் கால் பதிக்கும் எஃப் டிவி

இந்திய இளைஞர்களின் பின்னிரவு கேளிக்கையான எஃப் டிவியும் விரைவில் படத்தயாரிப்பில் இறங்க உள்ளது.
தொலைக்காட்சி ஜாம்பவான்களாக இருந்து படத்தயாரிப்பில் கால்பதித்த சோனி, ஸீ ஆகியவை இன்று மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. அவர்களின் தொலைக்காட்சி ஆதிக்கம் சினிமாவுக்கும், சினிமா தயாரிப்பு தொலைக்காட்சி வியாபாரத்துக்கும் பரஸ்பரம் உதவியாக உள்ளன. 
 
அந்த வரிசையில் புதிதாக எஃப் டிவி.
 

பா‌ரிஸை மையமாக வைத்து இயக்கும் ஃபேஷன் தொலைக்காட்சி படத்தயாரிப்பில் இறங்குவதற்கு முன்னோட்டமாக Tamanchey என்ற படத்தின் உரிமையை வாங்கியுள்ளது. இந்தப் படம் தீவிரவாதி அபுசலீமுக்கும் நடிகை மோனிகா பேடிக்கும் இடையிலான காதலை மையப்படுத்தியது. ஃபேஷன் தொலைக்காட்சி விரும்பும் கவர்ச்சி கச்சாப் பொருள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளது.
 
எஃப் டிவியின் திரைத்துறை பிரவேசம் பாலிவுட்டை மேலும் பளபளப்பாக்கும்.