Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொழில் வேறு, குடும்பம் வேறு... ஐஸ்வர்யா ராயின் பிலாசபிகல் டச்


Sasikala| Last Updated: சனி, 19 நவம்பர் 2016 (18:03 IST)
ரன்பீர் கபூருடன் மிக நெருக்கமாக நடித்து இந்தியாவையே திடுக்கிட வைத்தார் ஐஸ்வர்யா ராய். இந்தியாவுக்கே இவ்ளோ அதிர்ச்சி என்றால் சொந்த குடும்பத்தில் எவ்ளோ இருக்கும்?

 
 
இந்த கேள்வியை முன் வைத்து, ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரியப் போகிறார்கள் என்று வதந்தி கிளப்பிவிட்டனர். 
 
ஆனால், அப்படியெல்லாம் இல்லை, எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் அபிஷேக் பச்சன் என்பது தெரிய வந்துள்ளது.
 
வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் சூரிய வழிபாட்டு விழாவான ‘சாத்பூஜை’ யில் கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், குழந்தை ஆரத்யா ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களையும் இணைய தளத்தில் வெளியிட்டு, பிரிவு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 
இதுபற்றி கூறியிருப்பவர், குடும்பம் வேறு, தொழில் வேறு. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். எந்தப் பிரச்சனை என்றாலும் குடும்பத்துக்குதான் முதல் இடம் என்று கூறியுள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :