Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நானியின் இந்த சந்தோஷத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

nani
CM| Last Modified வியாழன், 5 ஏப்ரல் 2018 (14:57 IST)
‘குழந்தை போல இன்று ஷூட்டிங் செல்கிறேன்’ என நானி சந்தோஷமாகக் குறிப்பிட்டுள்ளார். 
ஸ்ரீராம் ஆதித்யா இயக்கும் பெயரிடப்படாத தெலுங்குப் படத்தின் ஷூட்டிங், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகர்ஜுனா, நானி இருவரும் நடிக்கின்றனர். நேற்றுதான் இந்த ஷூட்டிங்கில் முதன்முதலாகக் கலந்து கொண்டார் நாகர்ஜுனா.
nagu
அந்த மகிழ்ச்சியை நேற்று காலையில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நானி. “இன்று காலை ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு ஷூட்டிங் செல்வது மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. ஒரு குழந்தை போல உணர்கிறேன். நான் இப்படி இருக்க என்ன காரணம் தெரியுமா? இன்றுதான் ‘கிங்’ ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். வெல்கம் நாகர்ஜுனா சார்” என்று தெரிவித்துள்ளார் நானி.


இதில் மேலும் படிக்கவும் :