1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : சனி, 4 அக்டோபர் 2014 (22:57 IST)

படம் எடுக்க பைசா கேட்கலையாம் தோனி

மில்கா சிங், மேரி கோம் ஆகியோரின் வாழக்கை வரலாறை படமாக எடுத்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கின்றனர். தோனி என்ற இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறவர் நீரஜ் பாண்டே.
 
இந்தப் படத்தை எடுப்பதற்கு அனுமதி தந்த தோனி ராயல்டியாக பெரும் தொகை கேட்டதாக மீடியாவில் செய்தி வெளியானது. அதனை மறுத்த நீரஜ் பாண்டே, உண்மை என்னவென்றால் தோனி ராயல்டியாக ஒரு ரூபாய்கூட கேட்கவில்லை என்றார்.
 
நீரஜ் பாண்டே உன்னைப் போல் ஒருவனின் ஒரிஜினலான ஏ வெட்னெஸ்டே படத்தின் மூலம் இயக்குனரானவர். அவரது இரண்டாவது படம், அக்ஷய் நடித்த ஸ்பெஷல் 26. தோனி அவரது மூன்றாவது படம்.
 
நடிகர் சுஷாந்த் தோனியாக நடிக்க உள்ளார்.