Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகளை டேட் செய்ய கன்டீஷன் போடும் பிரபல நடிகர்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (18:04 IST)
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானு. திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தாலும், அதனை ஏற்பதில்லை.

 
 
இந்நிலையில் தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் எந்த வாலிபராக இருந்தாலும், 7 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.
 
அந்த எழு நிபந்தனைகள்:
 
# டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.
 
# எந்த நேரத்தில் பிடிக்கவில்லை என்று ரிஜெக்ட் செய்தாலும் அதை ஏற்க வேண்டும்.
 
# எந்த நேரமும் சுஹானாவை சுற்றி நான் (ஷாருக்கான்) இருப்பேன்.
 
# தன்னுடன் ஒரு வழக்கறிஞரை வைத்திருக்கும் தகுதி டேட் செய்யும் நபருக்கு இருக்க வேண்டும்.
 
# என் மகள் ஒரு இளவரசி என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
 
# ஜெயிலுக்கு செல்வதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது  என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
 
# என் மகளுக்கு என்ன செய்கிறாரோ அதை அவருக்கு நானும் செய்வேன்.


இதில் மேலும் படிக்கவும் :